மேற்கு வங்க சட்டபேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. திருணாமூல், பாஜக மற்றும் இடதுசாரிகள்-காங்கிரஸ் கூட்டணிகளுக்கிடையே இடையே அங்கு மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 292 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.
வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் வந்தபடியே மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா தலைமையிலான திருணாமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் அமர போவது உறுதியாகியுள்ளது. இருப்பினும், அங்கு கடும் போட்டி நிலவும் என கருத்துக்கணிப்பின் போது தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேற்கு வங்கத்தை கைப்பற்ற வேண்டுமென பாஜக, தொடர் முயற்சியில் ஈடுபட்டது. பணபலம், ஆள்பலம் என அனைத்து வியூகங்களையும் பாஜக கையாண்ட நிலையில், மம்தா ஒற்றை மனிதராக மாநிலம் முழுவதும் வீல்சேரிலேயே பரப்புரை மேற்கொண்டார். தற்போது வெளியாகியிருக்கும் முன்னிலை நிலவரங்கள், உண்மையாகும் பட்சத்தில் அவர் வீல்சேரில் பரப்புரை செய்தது மக்களிடையே அனுதாபத்தை ஏற்படுத்தியிருக்க வாய்ப்பிருக்கிறது.