அராம்பாக் தொகுதியைச் சேர்ந்த டிஎம்சி வேட்பாளர் சுஜாதா மொண்டல் கான், பாஜகவினர் அரண்டி பகுதியில் வைத்து தன்னைத் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பாக வெளியான காணொலியில், சிலர் கைகளில் மூங்கில் குச்சிகளைக் கொண்டு சுஜாதா மொண்டல் கானின் பின்னால் ஓடுவதைக் காண முடிகிறது.
டிஎம்சி வேட்பாளர் குற்றச்சாட்டு மேலும் அவர், பாஜகவினர் பெண் வாக்காளர்களை அச்சுறுத்தி, சித்திரவதை செய்வதாகவும் தெரிவித்தார்.
அராம்பாக் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சக்தி மோகன் மாலிக், பாஜகவின் வேட்பாளர் மதுசூதன் ஆகியோருக்கு எதிராக சுஜாதா மொண்டல் கானை டிஎம்சி நிறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பாஜக வேட்பாளர் மீது தாக்குதல்: திமுகவினர் 10 பேர் கைது