தமிழ்நாடு

tamil nadu

மாநிலங்களவை கூட்டத்தொடரிலிருந்து திரிணாமுல் எம்.பி இடைநீக்கம்

By

Published : Dec 21, 2021, 10:51 PM IST

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரையன் மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாநிலங்களவையில் அத்துமீறி நடந்ததாக டெரிக் உட்பட 12 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

MC MP Derek O'Brien suspended from the Rajya Sabha for unruly behaviour  Rajya Sabha news  திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரெக் ஓ பிரையன் மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம்  டெரெக் உட்பட 12 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்  தேர்தல் சட்ட திருத்த மசோதா 2021
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரெக் ஓ பிரையன்

புதுடெல்லி:திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரையன் மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாநிலங்களவையில் அத்துமீறி நடந்ததாக டெரிக் உட்பட 12 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

டெரிக் தேர்தல் சட்ட திருத்த மசோதா 2021 பற்றிய விவாதத்தின் போது, மாநிலங்களவையின் விதிமுறை புத்தகத்தை தூக்கி எறிந்தார் என கூறப்படுகிறது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள டெரிக் ஓ பிரையன் ‘‘கடந்த முறை நான் மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டபோது மத்திய அரசு விவசாயச் சட்டங்களை அமல்படுத்த முயன்றது. அதன் பின்னர் நடந்ததை அனைவரும் அறிவோம்.

இன்று நாடாளுமன்றத்தைே கேலி செய்யும் விதமாக தேர்தல் சட்ட திருத்த மசோதாவை (2021)பா.ஜ.க தாக்கல் செய்துள்ளது. இதனை அமுல் படுத்த எதிர்ப்பு தெரிவித்ததால் என்னை இடை நீக்கம் செய்துள்ளது’ இந்த மசோதாவும் விரைவில் ரத்து செய்யப்படும் என்று நம்புகிறேன்’’ என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:மகளிர் சுய உதவிக்குழுக்களின் வங்கி கணக்கில் ரூ.1000 கோடி; பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details