இன்று (டிச.10) சர்வதேச மனித உரிமைகள் தினம் உலகெங்கும் அனுசரிக்கப்படுகிறது. இதுகுறித்து மேற்கு வங்கம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
'மனித உரிமைகளை நிலைநாட்ட எங்கள் அரசாங்கம் உறுதியாக உள்ளது' - மம்தா பானர்ஜி
கொல்கத்தா: சர்வதேச மனித உரிமைகள் தினத்தில், மனித உரிமைகளை நிலைநாட்ட எங்கள் அரசாங்கம் உறுதியாக உள்ளது என மேற்கு வங்கம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி ட்வீட் செய்துள்ளார்.
அதில், "இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இப்போதெல்லாம், ஜனநாயகத்தை அழிப்பதற்கும், அடிப்படை உரிமைகளை நசுக்குவதற்கும், மக்களின் குரல்களை அடக்குவதற்குமான முயற்சிதான் அதிகளவில் நடைபெறுகிறது. மனித உரிமைகளை நிலைநாட்ட எங்கள் அரசாங்கம் உறுதியாக உள்ளது. கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் தனது அரசாங்கம் 19 மனித உரிமை நீதிமன்றங்களை அமைத்துள்ளது. இதுமட்டுமின்றி, 1995ஆம் ஆண்டில் மேற்கு வங்க மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்டதன் பின்னணியில் எனது தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களுக்கும் இயக்கங்களுக்கும் தான் இருந்தது. அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.