தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

‘ஊழலில் ரெக்கார்ட் பிரேக் செய்துள்ள திரிணாமூல் காங்கிரஸ்’ -பிரதமர் சாடல்! - சட்டப்பேரவைத் தொகுதி செய்திகள்

புதுடில்லி: திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஊழலில் அனைத்து ரெக்கார்டுகளை தாண்டியுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

TMC breaks all records for corruption, says PM Modi
TMC breaks all records for corruption, says PM Modi

By

Published : Mar 21, 2021, 12:30 PM IST

நாட்டில் நான்கு மாநிலங்களுக்கு, ஒரு யூனியன் பிரதேசத்திற்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, அனைத்து பகுதிகளிலும் அனைத்து கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர்.

அதில் 294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் அனைத்து கட்சியிகளும் மும்முரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்டுவருகின்றனர்.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் பாங்குராவில் நடைபெறவுள்ள தேர்தல் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 21) உரையாற்றவுள்ளார்.

முன்னதாக ட்வீட் செய்துள்ள பிரதமர் மோடி, “மேற்கு வங்க மக்கள் காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு 70 ஆண்டுகளை வழங்கியுள்ளனர். ஆனால், இந்த கட்சிகள் மக்களின் தேவைகளை நிறைவேற்றவில்லை. தற்போது, ​மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஊழலில் அனைத்து ரெக்கார்டுகளை தாண்டியுள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க...திமுகவை கலாய்த்த முதலைமைச்சர் முதல் மூதாட்டியிடம் வம்பிழுத்த மன்சூர் அலிகான் வரை: இன்றைய தேர்தல் சரவெடிகள்

ABOUT THE AUTHOR

...view details