தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நீட் தேர்வு விலக்கு: தெலங்கானா முதலமைச்சர் மகனுடன் திமுக எம்பிக்கள் சந்திப்பு - அசோக் கெலாட்

நீட் தேர்வுக்கு எதிராக 12 மாநில முதலமைச்சர்களுக்கு மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தையும், நீட் தேர்வு பாதிப்பு குறித்த நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு அளித்த பரிந்துரையையும் இணைத்து தெலங்கானா முதலமைச்சர் மகனும், அம்மாநிலத் தொழில் துறை அமைச்சருமான கே.டி. ராமாராவிடம் திமுக எம்பி டி.கே.எஸ். இளங்கோவன் இன்று (அக். 14) வழங்கினார்.

நீட் தேர்வு எதிர்ப்பு, தெலங்கானா முதலமைச்சர் மகன்,
நீட் தேர்வு எதிர்ப்பு

By

Published : Oct 14, 2021, 11:17 AM IST

ஹைதராபாத்: நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கையின் மொழிபெயர்ப்பு நகலை 12 மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு அனுப்பி, நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் நிலையை ஆதரிக்குமாறும், கல்வியில் மாநிலத்தின் முதன்மையை மீட்டெடுக்க முன்வருமாறும் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

மேலும், நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு இதுவரை எடுத்துள்ள முயற்சிகள் குறித்து விளக்கி, நீதியரசர் ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கையின் மொழிபெயர்ப்பு நகலை பல்வேறு மாநிலங்களில் முதலமைச்சர்களுக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேரில் சென்று வழங்கி அந்தந்த மாநில அரசுகளின் ஆதரவைக் கோர வேண்டும் எனவும் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

தொடரும் சந்திப்புகள்

இந்நிலையில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் தெலங்கானா தொழில் துறை அமைச்சர் கே.டி. ராமாராவை சந்தித்து நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதம், ஏ.கே. ராஜன் குழு அளித்த பரிந்துரையின் மொழிபெயர்வு நகல் ஆகியவற்றை வழங்கினர். கே.டி. ராமாராவ், தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகரின் மகனாவார்.

ஸ்டாலின் கடிதத்தையும், ஏ.கே. ராஜன் குழு அறிக்கையும் கே.டி. ராமாராவிடம் வழங்கிய திமுக எம்பிக்கள்

இந்தச் சந்திப்பின்போது, வடசென்னை மக்களவை உறுப்பினரும், திமுக மருத்துவ அணிச் செயலாளருமான கலாநிதி வீராசாமி உடனிருந்தார். இந்தக் குழு கடந்த 6ஆம் தேதி கேரள முதலமைச்சர் பினராயி விஜயனையும், கடந்த 11ஆம் தேதி ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெயமோகன் ரெட்டியையும் சந்தித்து ஸ்டாலினின் கடிதத்தையும், ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கையும் அளித்தது.

முன்னதாக, இது தொடர்பாக மக்களவை உறுப்பினர் கனிமொழி ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கையும், திருச்சி சிவா ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டையும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வெங்கையா நாயுடுவால் சீற்றமடைந்த சீனா: பதிலடி தந்த இந்தியா!

ABOUT THE AUTHOR

...view details