திருப்பதி: திருமலை - திருப்பதி ஏழுமலையான் கோயிலின் சொத்து மதிப்பு குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில், சொத்து மதிப்பு குறித்து தேவஸ்தான நிர்வாகம் நேற்று(நவ.5) வெள்ளை அறிக்கை வெளியிட்டது.
அதில், "நாட்டில் உள்ள பல்வேறு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில், கடந்த செப்டம்பர் மாதம் வரை, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 15,938 கோடி ரூபாய் நிரந்தர வைப்பு நிதி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு வங்கிகளில் 10,258.37 கிலோ தங்கம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
கோயில்களில் உள்ள தங்க, வைர ஆபரணங்கள், வெள்ளிப்பொருட்கள், வங்கியில் உள்ள ரொக்கம், நிலங்கள், மனைகள் உள்ளிட்ட அனைத்தையும் கணக்கிட்டால், திருப்பதி ஏழுமலையானின் சொத்து மதிப்பு 2.25 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது" என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.