தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உத்தரகாண்ட் முதலமைச்சராக தீரத் சிங் ராவத் பொறுப்பேற்பு! - தீரத் சிங் ராவத்

டேராடூன்: உத்தரகாண்ட் முதலமைச்சராக தீரத் சிங் ராவத் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

தீரத் சிங் ராவத்
தீரத் சிங் ராவத்

By

Published : Mar 10, 2021, 7:21 PM IST

உத்தரகாண்ட் சட்டப்பேரவைத் தேர்தல், அடுத்தாண்டு நடைபெற்ற உள்ள நிலையில், அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சராக தீரத் சிங் ராவத் இன்று பதவியேற்றுக்கொண்டார். பவுரி மக்களவை தொகுதி உறுப்பினரான அவர், 2013 முதல் 2015 வரை உத்தரகாண்ட் மாநில பாஜக தலைவராக பொறுப்பு வகித்தார்.

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால், உத்தரகாண்ட் அமைச்சர் தான் சிங் ராவத் ஆகிய முக்கிய தலைவர்கள் இருந்தபோதிலும், பிரதமர் மோடியின் ஒப்புதல் பேரிலேயே தீரத் சிங் ராவத்திற்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தீரத் சிங் ராவத்திற்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், நிர்வாக ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் நீண்ட கால அனுபவம் கொண்டவர் தீரத் சிங் ராவத் என பதிவிட்டுள்ளார். அவரின் தலைமையின் கீழ் மாநிலம் வளர்ச்சியை அடையும் எனவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சராக இருந்த திரிவேந்திர சிங் ராவத்தின், செயல்பாடுகள் சொல்லி கொள்ளும் அளவுக்கு இல்லை எனவும், எம்எல்ஏக்கள் பலர் அதிருப்தியில் இருந்ததாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், முதலமைச்சர் பதவியிலிருந்து அவர் விலகினார்.

ABOUT THE AUTHOR

...view details