டேராடூன்: ஜூன் 29 வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரகாண்ட் அரசு அறித்துள்ளது. இந்த ஊரடங்கின் போது வாரத்தில் 5 நாட்கள் கடைகள், ஷாப்பிங் மால்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் சார் தாம் யாத்திரை ஜூலை 11 முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்டில் ஊரடங்கு நீட்டிப்பு - வாரத்தில் 5 நாட்கள் கடை திறக்கலாம் - Uttarakhand extends lockdown till June 29
சார் தாம் யாத்திரை ஜூலை 11 முதல் தொடங்கும், இதில் கலந்துகொள்ள வருபவர்களுக்கு ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் நிச்சயமாக வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Uttarakhand extends lockdown till June 29
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு ஆணையில், உணவகங்கள், தங்கும் விடுதி 50 சதவிகித ஆட்களுடன் இயங்கலாம். ஆனால், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இயங்க அனுமதியில்லை. ஜூன் 29ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்கலாமா வேண்டாமா என முடிவு எடுக்கப்படும்.
சார் தாம் யாத்திரை ஜூலை 11 முதல் தொடங்கும், இதில் கலந்துகொள்ள வருபவர்களுக்கு ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் நிச்சயமாக வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.