டெல்லி : கிழக்கு லடாக்கில் இந்திய சீன வீரர்கள் மோதலையடுத்து இந்திய அரசு ஜனவரியில் டிக் டாக் உள்ளிட்ட 58 சீன செயலிகளுக்கு தடை விதித்தது.
இந்நிலையில் டிக் டாக் (TikTok) நிறுவனத்தின் தாய் அமைப்பான பைட் டான்ஸ் நிறுவனம் வேறு ஒரு நிறுவனம் பெயரில் டிக் டாக்கை இந்தியாவில் மீண்டும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது டிக் டாக் (TikTok) என்ற பெயருக்கு பதிலாக டிக் டோக் (TickTock) என்ற பெயரில் டிக் டாக் மீண்டு(ம்) வர வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.