கேரளா: மூணார் அருகே பெரியவாரை எஸ்டேட் பகுதியில் அப்புராஜூ என்பவருக்கு சொந்தமான பசு மாடு ஒன்று மேய்ந்து கொண்டு இருந்தது. இந்த பகுதியின் அருகே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பும் அமைந்துள்ளது
இந்த நிலையில் பிற்பகலில் அங்கு வந்த புலி ஒன்று அங்கிருந்த பசுவை தாக்கி கொன்றது. பசுவில் அலறல் சத்தத்தை கேட்ட அந்த பகுதி மக்கள் விரைந்து வரவே அங்கிருந்து புலி தப்பி ஓடியது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதே அப்புராஜூக்கு சொந்தமான இரண்டு பசுமாடுகளை புலி தாக்கி கொன்ற நிலையில் மீண்டும் மற்றொரு பசுவையும் புலி தாக்கி கொன்றுள்ளது