தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உயிரியல் பூங்காவில் புலிகள் அதிகரிப்பு! - ரணதம்போர்

ராஜஸ்தான் உயிரியல் பூங்காவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Ranthambore
Ranthambore

By

Published : Jul 14, 2021, 5:07 PM IST

ரணதம்போர் (ராஜஸ்தான்) : ராஜஸ்தான் ரணதம்போர் தேசிய உயிரியல் பூங்காவில் புலிகளின் எண்ணிக்கை மெல்ல உயர்ந்துவருகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் ரணதம்போர் உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இங்கு பல்வேறு அரிய வகை புலிகள் வாழ்கின்றன.

இந்தப் புலிகளை சிறப்பு கவனம் செலுத்தி உயிரியல் பூங்கா நிர்வாகிகள் கவனித்துவருகின்றனர். புலிகளில் குறியீடுகளும் இடப்பட்டன. முக்கிய பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், அங்கு புலிகளின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்துவருவது தெரியவந்துள்ளது. இதனை பூங்கா நிர்வாகிகள் மகிழ்வுடன் தெரிவித்தனர்.

உயிரியல் பூங்காவில் புலிகள் அதிகரிப்பு!

இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், “ரணதம்போர் உயிரியல் பூங்காவில் புலிகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்துவருகிறது. தற்போது 71 புலிகள் உள்ளன. முன்னதாக முதல் பிரசவத்தில் பிறந்த புலிக்குட்டி ஒன்று உயிரிழந்தது.

அதன்பின்னர் புலி இரண்டு குட்டிகள் ஈன்றது. அந்தக் குட்டிகள் ரித்தி மற்றும் சித்தி ஆகும். இவைகள் நலமுடன் உள்ளன. பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கண்டுகளிக்கின்றனர்.

இந்தப் புலிக்குட்டிகள் பிறந்து இரண்டு மாதங்கள்தான் ஆகின்றன. ஆகவே இதனை தீவிரமாக கண்காணித்துவருகிறோம். சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன” என்றனர்.

இதையும் படிங்க : தெனாவட்டாக சாலையை கடந்த புலி!

ABOUT THE AUTHOR

...view details