லக்கிம்பூர் கேரி:உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் கோலா வனப்பகுதியில், தோட்டத்தை காவல் காத்துக்கொண்டிருந்த ஹீராலால் என்பவரை புலி தாக்கி கொன்றது. கடந்த 6 நாட்களில் கோலா பகுதியில் புலிகள் தாக்கியதால் மொத்தம் 4 பேர் உயிரிழந்தனர். புலிகள் தாக்குதல் தொடர்ந்து வருவதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
தொடரும் புலிகள் தாக்குதல்... 6 நாள்களில் 4 பேர் பலி... மக்கள் அச்சம்...
லக்கிம்பூர் கேரியில் தோட்டத்தை காவல் காத்துக்கொண்டிருந்த நபரை புலி தாக்கி கொன்றது. 6 நாட்களில் புலிகளின் தாக்குதலால் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி சஞ்சய் பிஸ்வால் கூறுகையில், "மூன்று நாட்களாக கோலா பகுதியில் முகாமிட்டுள்ளோம். இந்த சம்பவம் இரவு நேரத்தில் நடந்துள்ளது. அங்கு புலிகள் நடமாட்டம் இருப்பதால், இதுபோன்ற தாக்குதல்கள் தொடர வாய்ப்புள்ளது. அதனால், கோலா வனப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம். காட்டைச் சுற்றியுள்ள வயல்களுக்கு காவலுக்கு செல்லும்போது தனியாக செல்ல வேண்டாம், குழுவாக செல்லலாம். அனைத்து பகுதிகளிலும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் உள்ளனர். இதுதொடர்பாக வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்" என்று கூறினார்.