இன்றும், நாளையும் தென்கிழக்கு வங்கக்கடலில் மையம் கொள்ளும் புயல் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ஆந்திராவின் கடற்கரையோரம் மற்றும் ராயலசீமா பகுதிகளில் இடி, மின்னலுடன்கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
டிசம்பர் 9ஆம் தேதிக்குப் பின்னர் தொடர்ந்து மூன்று நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.