தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மேம்பாலத்திலிருந்து தவறி விழுந்து 3 இளைஞர்கள் உயிரிழப்பு - குடிபோதையில் பைக் ஓட்டியதால் நேர்ந்த சோகம்! - காசியாபாத்

குடிபோதையில் மோட்டார் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள், தூய்மைப் பணியாளர் மீது மோதிய விபத்தில், மூவரும் மேம்பாலத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தனர்.

Three youth dies
Three youth dies

By

Published : Jun 30, 2022, 10:12 PM IST

காசியாபாத்: உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில், மாவட்ட மருத்துவமனைக்கு முன்பு உள்ள மேம்பாலத்தில் நேற்றிரவு(ஜூன் 29) இரண்டு இளைஞர்கள் குடிபோதையில் அதிவேகமாக மோட்டார் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது, மேம்பாலத்தில் தூய்மைப்பணியில் ஈடுபட்டிருந்த அன்மோல் என்பவர் மீது மோதியுள்ளனர். இந்த விபத்தில் மூவரும் மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த மூவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த தூய்மைப்பணியாளருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாததால்தான் இறந்துவிட்டார் என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர். அவரது இறப்புக்கு நீதி வேண்டும் என்றும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதையும் படிங்க: CCTV: மூதாட்டியைக் கொன்று 20 சவரன் நகைகள் கொள்ளை - இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details