தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

லாரியை முந்தும் முயற்சியில் தோல்வி - கோர விபத்தில் சிறுமி உள்பட 5 பேர் பலி! - சத்தீஸ்கர் விபத்து

சத்தீஸ்கர் மாநிலத்தில் கார், லாரி மற்றும் பைக் என மூன்ற வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் சிறுமி உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

சத்தீஸ்கரில் கோர விபத்து
சத்தீஸ்கரில் கோர விபத்து

By

Published : Mar 11, 2023, 7:13 AM IST

சத்தீஸ்கர்: பலோட் மாவட்டம் மார்கோடலா அருகே நடந்த பயங்கரமான விபத்தில் சிறுமி உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலோட்டில் இருந்து பானு பிரதாபூரை நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரியை, அதன் பின்னே சென்ற கார் முந்திச் செல்ல முயன்று உள்ளது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், நிலை தடுமாறி லாரி மீது மோதியது. மேலும் தொடர்ந்து வந்த பைக் மீதும் மோதி விபத்துக்குள்ளானது.

நொடியில் நடந்த இந்த கோர விபத்தில் 13 வயது சிறுமி உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்த பலோட் காவல்துறையினர், உயிருக்கு ஆபத்தான நிலையில், படுகாயங்களுடன் இருந்த மூன்று நபர்களை மீட்டு டவுண்டி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து, இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 10 நாள்களுக்கு முன்பு சத்தீஸ்கரில், தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் வேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்த நிலையில், தற்போது மேலும் ஒரு விபத்து அப்பகுதியில் உள்ள அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இதையும் படிங்க: சிசிடிவி: 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதல் - நெஞ்சை பதற வைக்கும் காட்சி

ABOUT THE AUTHOR

...view details