ஆந்திரப் பிரதேசம்:பாபட்லா மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்களின் ஆசிரியர்களுடன் சிந்தூருக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது சகிலேறு ஆற்றில் கும்மாடி ஜெய ஸ்ரீ(14), சுவர்ண கமலா(14), கீதாஞ்சலி(14) ஆகிய மூன்று மாணவிகள் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவிகளைத் தேடத் தொடங்கினர். காவல்துறையினர் தேடலில் இரண்டு மாணவிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.