பெங்களூரு: இலங்கை குடியுரிமை பெற்ற 3 நபர்கள் சட்டவிரோதமாக பெங்களூருவில் தங்கி வருவதாக பெங்களூரு குற்ற பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து 3 இலங்கை குடியுரிமை பெற்ற நபர்கள மற்றும் பெங்களூருவை சேர்ந்த பிரபல ரவுடியை இன்று (ஆகஸ்ட் 24) காலை குற்றப்பிரிவு அதிகாரிகள் குற்றவாளிகளை அவர்களது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.
குற்றப்பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இலங்கையில் இருந்த வந்த நபர்கள் கசன் குமார் சானகா (36), அமில நுவான் (36), மற்றும் ரங்க பிரசாத் (36) என கண்டறியப்பட்டுள்ளன. இவர்கள் இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக எந்த விதமான ஆவணங்கள் விசா, பாஸ்போர்ட் இல்லாமல் படகின் மூலம் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர்.
தமிழநாட்டில் உள்ள சேலம் மாவட்டத்தில் இருந்து பெங்களூருக்கு வந்தடைந்துள்ளனர். பெங்களூருவுக்கு வந்த இலங்கை நபர்களை பல குற்றங்களை செய்த பிரபல ரவுடி ஜெய் பரமேஷ் (42) , மூவருக்கும் தங்குவதற்கு இடம் கொடுத்து உதவியுள்ளார். மேலும், இவர்கள் பெங்களுருவில் உள்ள எலஹங்கா போலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர்.
மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு (CCP) கிடைத்த தகவலின் பேரில் அவர்கள் தங்கியிருந்த வீட்டில் நடத்திய சோதனையின் போது 4 நபர்களையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், 13 மொபைல் போன்கள், இலங்கை முகவரிகள் கொண்ட விசிட்டிங் கார்டுகள், பஸ் டிக்கெட்டுகள், பேப்பர் கட்டிங், பலரது ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையின் ஜெராக்ஸ் நகல்கள் சிக்கியுள்ளது எனக் போலீசார் தெரிவித்தனர்.