சத்தீஷ்கர் மாநிலம் சாரோட பஸ்தி பகுதியில் தசரா பண்டிகை கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. இந்நிலையில் சாதுக்கள் 3 பேர் அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை கடத்த முயன்றதாக கூறப்படுகிறது.
இதனைக் கண்ட பொதுமக்கள், போலீசார் முன்னிலையில் அவர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர். போலீசார் தடுக்க முயன்ற போதும் பொதுமக்களின் கோபம் குறையவில்லை.
பின்னர் அவர்களை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாதுக்களை பொதுமக்கள் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சுமார் 30 பேரிடம் விசாரணை நடத்தினர்.
தாக்கப்பட்ட சாதுக்கள் 3 பேரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் குழந்தையை கடத்தியதாக எண்ணி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பொதுமக்கள் கட்டையால் தாக்கியதில் சாதுக்களுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க : அருணாச்சலபிரதேச மருத்துவரின் அசத்தல் தமிழ் பேச்சு