ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரால் தாக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அனந்த்நாக் போலீசார் தரப்பில், அஷ்முகம் பகுதியில் வசித்துவரும் ஜாவேத் ஹாசன் ரத்தேர் என்பவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று (டிசம்பர் 23) இவர் அவரது தாயார் ஹபீசா பாகமை சரமாரிய தாக்கியுள்ளார். இதைத்தடுக்க வந்த குலாம் நபி காதிம், முகமது அமீன் ஷா உள்பட 8 பேரை கடுமையாக தாக்கியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரால் 3 பேர் கொலை - mentally ill killed 3 people
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரால் தாக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரால் 3 பேர் கொலை
இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு ஹபீசா பாகம், குலாம் நபி காதிம், முகமது அமீன் ஷா மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மீதமுள்ள 6 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதனிடையே தகவலறிந்ததும் சம்பவயிடத்துக்கு விரைந்து ஜாவேத் ஹாசன் ரத்தேரை கைது செய்தோம். அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஹைதராபாத்: விபத்தில் 8 மாத கர்ப்பிணி உயிரிழப்பு