டெல்லியில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சித்தார்த் என்பவர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவினர் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த நாடு முழுவதும் 25 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்துவருகின்றனர். கடந்த அக்டோபர் 4ஆம் தேதி டெல்லியிலிருந்து இவர்கள் புறப்பட்டனர்.
கார் மூலம் வந்தவர்கள் 14 மாநிலங்களை கடந்து இன்று புதுச்சேரி வந்து சேர்ந்தனர். பாரதி பூங்கா அருகில் காவல் கண்காணிப்பாளர் மாறன் அவர்களை வரவேற்றார். தொடர்ந்து தமிழ்நாட்டின் கடலோரம் வழியாக தென்பகுதியில் பயணித்துவருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி மீண்டு டெல்லிக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.