உத்தரகாசி: கடந்த அக். 15ஆம் தேதி இந்தோ - திபேத்தியன் எல்லை காவல்படையின் கண்காணிப்புக்குழுவுடன் மூன்று சுமைத்தூக்கும் பணியாளர்கள் (Porters) சர்வதேச எல்லையில் இருந்து, இந்திய - சீன எல்லைப்பகுதியான நீளப்பனி சோதனைச்சாவடிக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்தப் பயணத்தின்போது மூன்று பணியாளர்களும் காணாமல் போயுள்ளனர். தீவிர பனிப்பொழிவினால் அவர்கள் வழித்தவறிச்சென்றதாக எல்லை காவல்படையினர் குழுவில் இருந்து காணாமல் போய்விட்டதாக அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
உடல்கள் மீட்கும் பணி தொடக்கம்
இதன்பின்னர், கடந்த அக். 18, 19ஆம் தேதிகளில் அவர்களை தேடும்பணி முழுவீச்சில் நடந்துள்ளது. அவர்களை கண்டுபிடிக்க மேலும் ஐந்து சுமைத்தூக்கும் பணியாளர்களும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அவர்களை மூன்று நாள்களாக தேடிவந்த நிலையில், அந்த மூவரும் பனியில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல் இன்று பனியில் புதையுண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மூவரும் உத்தரகாசியை சேர்ந்தவர்கள்
இது குறித்து, இந்திய - திபெத்திய எல்லை காவல்படையின் கட்டளை அதிகாரி அபிஜித் சமயார் கூறுகையில், "பனியில் இருந்து அவர்களின் உடல்களை மீட்கும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது. பின்னர், அவர்களின் உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்படும்" என்றார்.
உயிரிழந்த மூன்று பணியாளர்களும் உத்தரகாண்ட் தலைநகர் உத்தரகாசியைச் சேர்ந்தவர்கள் என்றும், படையினருக்கு உதவிப்புரியவதற்காக அவர்கள் உள்ளூர் நிறுவனம் மூலம் பணியமர்த்தப்பட்டவர்கள் என்றும் உத்தரகாசி பேரிடர் மேலாண்மை துறை ஆலோசகர் ஜெய் பன்வர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட கார்