ஜம்மு காஷ்மீரில் உள்ள ராம்பாக் பகுதியில் காவல்துறையுடன் பாதுகாப்புப் படையினர் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர். அங்குள்ள மறைவிடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்தது இந்த சோதனையின்போது தெரியவந்துள்ளது.
பாதுகாப்புப் படையினரை பார்த்ததும் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடத்தொடங்கியுள்ளனர். பின்னர், பாதுகாப்புப் படையினரும் பதிலுக்குத் தாக்குதல் நடத்த இரு தரப்புக்கும் இடையே அரை மணிநேரம் மோதல் வெடித்தது.