கரோனா தொற்றின் இரண்டாம் அலை நாட்டை உலுக்கி வரும் நிலையில், தெலங்கானாவின் மானுகுருவில் வசித்து வந்த மூன்று மாவோயிஸ்டுகள் கரோனா தொற்றுக்கு பயந்து காவல் துறையினரிடம் சரணடைந்தனர்.
இவர்களிடமிருந்து 10 ஜெலட்டின் குச்சிகள், மூன்று டெட்டனேட்டர் டெண்டர்கள், நான்கு பேட்டரிகள், ஒரு கம்பி மூட்டை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி) சுனில் தத் தெரிவித்தார்.