தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்மூ-காஷ்மீரில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொலை! - குப்வாரவில் உள்ள ஜூமான்குண்ட் மாவட்டத்தில் ஊடுருவ முயன்ற போது தீவிரவாதி

ஜம்மு-காஷ்மீர் குப்வாரவில் உள்ள ஜூமான்குண்ட் மாவட்டத்தில் ஊடுருவ முயன்ற போது பாதுகாப்பு படையினரால் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மூ-காஷ்மீரில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!
ஜம்மூ-காஷ்மீரில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

By

Published : May 26, 2022, 9:34 AM IST

குப்வாரா (ஜம்மூ-காஷ்மீர்):ஜம்மூ-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குப்வாரா பகுதியில் இன்று (மே26) காலை லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அவர்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். இவர்கள் ஜூமான்குண்ட் கிராமத்திற்குள் ஊடுருவ முயற்சித்த போது சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து காஷ்மீர் காவல்துறை உயர் அதிகாரி கூறுகையில், அவர்கள் அணிந்திருந்த உடை லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சார்ந்தவர்கனின் உடை என தெரிவித்தார். முன்னதாக நேற்று காஷ்மீரைச் சேர்ந்த டிவி நடிகை அம்ரீன் பட் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், தற்போது 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஜம்மு-காஷ்மீரில் டிவி நடிகை சுட்டுக்கொலை!

ABOUT THE AUTHOR

...view details