கதிஹர் :பீகாரில் போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்கரார்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளமுள்ளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பீகார் மாநிலம் கதிஹர் மாவட்டத்தில் மின் துண்டிப்பை கண்டித்து நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
மாவட்டத்தில் முறையற்ற மின் விநியோகத்தை கண்டித்து பொது மக்கள் பர்சாய் பிளாக் ஆபிஸ் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். போராட்டம் கலவரமாக வெடித்த நிலையில், கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்ற போலீசார் மீது பொது மக்கள் கற்களை வீசியதாக கூறப்படுகிறது.
இதனால் போலீசாரர்களுக்கும், பொது மக்களுக்கும் இடையே கலவரம் வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் கலவரத்தின் இடையே போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலேயே ஒருவர் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், மற்ற இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவர் முகமது குர்ஷித் என்றும் பசல் கிராமத்தை சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.