தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சாலை விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு! - தமிழ் செய்திகள்

கர்நாடகா மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

Accident death
Accident death

By

Published : Jun 7, 2021, 1:04 AM IST

பெங்களூர் (கர்நாடகா): ராய்ச்சூர் மாவட்டத்தில் லிங்காசுகூர் தாலுக்கா நாகராஹா அருகே கார், இருசக்கர வாகனம் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகாக்லோட் மாவட்டம் ஹனகுண்டாவிலிருந்து பசவ்ராஜ் (25) என்பவர், தனது மனைவியின் தங்கை பல்லவி (23), தனது மகன் ஷரத் (2) ஆகியோருடன் லிங்காசுகூர் மாவட்டத்தில் உள்ள குண்டகோலா கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது எதிரே வந்த காரின் மீது அவர் மோதியதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இதுகுறித்து முடகல்லா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: '9.27 லட்சம் குழந்தைகளுக்கு மோசமான ஊட்டச்சத்து குறைபாடு' ஆர்டிஐ தகவல்!

ABOUT THE AUTHOR

...view details