தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரயிலில் பயணி பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்ல முயற்சி - 3 பேர் பலி - தீ விபத்தில் தப்ப விபரீத முடிவு! - kerala train sets fire

ஓடும் ரயிலில் பயணியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்ல முயன்ற சம்பவத்தில் ரயிலில் தீ பற்றியது. தீ விபத்தில் இருந்து தப்பிக்க ரயிலை விட்டு வெளியே குதித்த குழந்தை உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 3, 2023, 9:20 AM IST

கோழிக்கோடு : ரயிலில் மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நிலையில், தீக்கு பயந்து ஓடும் ரயிலில் இருந்து வெளியே குதித்த 2 வயது சிறுமி, பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆலப்புழா - கண்ணூர் எக்சிக்யூடிவ் விரைவு ரயில் நேற்று (ஏப் 02) இரவு எலதூர் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டு இருந்த போது, மர்ம நபர் ஒருவர் பயணி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. நொடிப் பொழுதில் தீ ரயிலில் பரவிய நிலையில், அதே ரயிலில் பயணித்த பெண், இளைஞர், சிறுமி உள்ளிட்டோர் ரயிலில் இருந்து வெளியே குதித்து உள்ளனர்.

ரயிலில் ஏற்பட்ட திடீர் தாக்குதலில் பயணிகள் நிலை குலைந்தைனர். இந்த தாக்குதலில் 9 பயணிகள் தீக்காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் பயணிகள் கொடுத்த தகவலின் படி ரயிலில் இருந்து வெளியே குதித்த 3 பேரை போலீசார் சடலமாக மீட்டனர்.

போலீசாரின் விசாரணையில் உயிரிழந்தவர்கள் ரஹமத் மற்றும் அவரது தங்கையின் 2 வயது மகள் சஹாரா என தெரிய வந்து உள்ளது. 3வதாக இறந்த பெண்ணின் அடையாளம் மற்றும் விபரங்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயிலில் தீ விபத்து ஏற்படுத்திய நபர் தப்பியதாக கூறப்படும் நிலையில், அவரது பை, செல்போன் உள்ளிட்ட உடைமைகளை போலீசார் கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தாக்குதலில் ஈடுபட்ட நபர் 35 வயது மதிக்கத்தக்கவர் என்றும் கோரபுழா பாலம் அருகே ரயில் நின்ற போது மர்ம நபர் ரயிலை விட்டு இறங்கி தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பொருத்தப்பட்டு உள்ள சிசிடிவி கேமிராக்களை கொண்டு மர்ம நபரை அடையாளம் காணும் பணியில் ரயில்வே போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

எலதூர், கட்டிலா, பேடிகா, கோரபுழா உள்ளிட்ட பகுதிகளில் போலீசர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். ரயிலில் தீ விபத்து ஏற்படுத்தி அதில் குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க :"உக்ரைன் பக்முத் நகரை கைப்பற்றிவிட்டோம்" - ரஷ்யாவின் வாக்னர் குழு தகவல்!

ABOUT THE AUTHOR

...view details