ஆந்திரா மாநிலம்:தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மூன்று மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சித்தூர் பகுதியில் பல ஆண்டுகளாக யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வந்து உள்ளது. மேலும், இந்த யானைக் கூட்டங்கள் இங்கு உள்ள பயிர்கள் மற்றும் தோட்டங்களை நாசம் செய்து வந்துள்ளன. இதனால் வேதனை அடைந்த விவசாயிகள் அதிகமுறை வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்து உள்ளனர்.
இருப்பினும், வனத்துறையினர் தரப்பிலிருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தங்கள் பயிர்களைக் காக்க விவசாயிகள் மின் வேலி அமைத்து உள்ளனர். ஆதலால், பயிர்களை மேய வந்த யானைகள் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவங்களும் அதிகமாக நிகழ்ந்து உள்ளன. தற்போதும் இந்தப் பகுதியில் பழமனேரு தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற 3 யானைகள் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளது.
இதையும் படிங்க:வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்! சமூக வலைதளம் மூலம் ஆசைக்காட்டி ரூ.1 கோடி மோசடி!
யானைகள் பலியானதைக் கண்ட அப்பகுதியில் உள்ள மக்கள், உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் அளித்து உள்ளனர். தகவலின் பேரில் விரைந்து வந்த அதிகாரிகள், விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணையில் வேகமாக வந்த சரக்கு லாரி மோதி யானைகள் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. மேலும் விபத்திற்குக் காரணமான சென்னை மாநகருக்கு தக்காளி ஏற்றிச் சென்ற Eicher ட்ரக் என்பதும் தெரிய வந்து உள்ளது. இதனால் அதிகாரிகள் விபத்திற்கு காரணமான ட்ரக்கை பறிமுதல் செய்து உள்ளனர்.