கொல்கத்தா:மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் மாவட்டத்தில் உள்ள துர்காபூர் இரும்பாலையில் நேற்று(பிப்.18) வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஐந்து தொழிலாளர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில், உயிரிழந்த தொழிலாளர்கள் மூவரும் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டவர்கள். இந்த விபத்திற்கு உயர் அலுவலர்களே காரணம் என்று தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதனடிப்படையில் விசாரணை நடைபெற்றுவருகிறது. சிகிச்சை பெற்றுவரும் தொழிலாளர்கள் குறித்து விரைவில் தெரிவிப்போம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.