தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மும்பை அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: உயிரிழப்பு 11ஆக அதிகரிப்பு - மும்பை அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து

மகாராஷ்டிரா மும்பையில் நான்கு மாடிக் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மும்பை அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து
மும்பை அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து

By

Published : Jun 28, 2022, 5:59 PM IST

மும்பை (மகாராஷ்டிரா): குர்லா அருகே நாயக் நகர் பகுதியில் நள்ளிரவில் நான்கு மாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது வரை 12 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. காயமடைந்தவர்கள் காட்கோபர் மற்றும் சியோனில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தீயணைப்பு வீரர்கள், காவல் துறையினர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்பு வாகனங்கள், நவீன உபகரணங்கள் மீட்டுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர். இந்தநிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும், காயமடைந்தவர்களுக்கும் அரசு சாப்பில் நிவாரணம் வழங்கப்படும் என அத்தொகுதி எம்எல்ஏ தெரிவித்தார்.

மும்பை அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: உயிரிழப்பு 11ஆக அதிகரிப்பு

இதையும் படிங்க: மும்பையில் நான்கு மாடி கட்டடம் இடிந்து விபத்து - ஒருவர் பலி

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details