ராஞ்சி:ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை அடுத்த கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் வசித்துவந்தவர் சச்சின் குமார் வெர்மா. இவர் உப்பர் பஜார் பகுதியில் டாடா 407 ரக வாகனத்தைத் திருடிவிட்டதாகக் கூறி, அப்பகுதி மக்கள் பலர் கும்பலாகச் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சச்சின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, சச்சின் அவரது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக நண்பர்களுடன் சென்றார். அவர் ஒரு அப்பாவி. அவர் இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபட மாட்டார் என அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.