பாட்னா:பிகார் மாநிலம் பெகுசராய் பகுதியை சேர்ந்த நீலம் குமாரி (15), ரீட்டா குமாரி(12), ராம்ப்ரீத் குமார்(15) ஆகிய மூன்று சிறார்கள் இன்று(ஜூலை 25) காலை வழிபாட்டுக்காக அருகில் உள்ள தோட்டத்தில் பூப்பறிக்க சென்றனர்.
அப்போது நான்கு தெரு நாய்கள் மூவரையும் விரட்டியது. அப்போது, மூவரும் எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த வறண்ட கிணற்றில் தவறி விழுந்தனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டவந்த ஊர் மக்கள், படுகாயங்களுடன் மூவரையும் கிணற்றில் இருந்து வெளியே கொண்டுவந்தனர்.