தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பழங்குடியின மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் கைது - கோலோபிரா காவல் நிலைய

ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின பள்ளி மாணவியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,

Etv Bharatபழங்குடியின  பள்ளி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மூவர் கைது
Etv Bharatபழங்குடியின பள்ளி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மூவர் கைது

By

Published : Sep 29, 2022, 8:35 PM IST

டேராடூன்:ஜார்கண்ட் மாநிலம் சிம்தேகா மாவட்டத்தின் கோலேபிரா பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வரும் 14 வயது பழங்குடியின மாணவியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சில தினங்களுக்கு முன் அம்மாணவி வயிறு வலி காரணமாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர் மாணவி கர்ப்பமாக இருப்பதை அறிந்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பெற்றோர் கோலோபிரா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் மாணவியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது 3 பேர் கூட்டுப்பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அதன்பின் ஆகாஷ் டெட், அமன் டுங்டுங் மற்றும் ரோஹித் குலு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அம்மாணவி கடந்த ஜூன் மாதம் அவருடன் படிக்கும் இரண்டு மாணவிகளுடன் கிராமத்தின் ஒதுக்குப்புறமாக இடத்துக்கு சென்றதாகவும், அப்போது அடையாளம் தெரியாத மூவர் அங்கு வந்து மாணவியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:வீடியோ: இரக்கமின்றி அடித்து கொல்லப்பட்ட குரங்குகள்... மரத்தில் தொங்கவிட்ட கொடூரம்...

ABOUT THE AUTHOR

...view details