பெங்களூரு: கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் 6 பேருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுத்த நபர், பாகிஸ்தான் வங்கியில் 50 லட்ச ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் குறிப்பிட்ட 7 நீதிபதிகளை கொல்வேன் என்றும் தெரிவித்ததாக கூறப்பட்டு உள்ளது.
அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், கர்நாடக உயர் நீதிமன்ற ஊழியர் ஒருவருக்கு, நீதிமன்றத்தின் 6 நீதிபதிகளைக் கொன்று விடுவதாக வாட்ஸ் அப் மூலம் மிரட்டல் விடுத்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உயர் நீதிமன்றத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி கே.முரளிதருக்கு ஜூலை 12 ஆம் தேதி இரவு 7 மணியளவில் வாட்ஸ் அப் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அந்த வாட்ஸ் அப் பதிவில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் முகமது நவாஸ், எச்.டி. நரேந்திர பிரசாத், அசோக் ஜி நிஜகன்னவர், எச்.பி.சந்தேஷ், கே.நடராஜன் மற்றும் பி.வீரப்பா ஆகிய 6 நீதிபதிகளைக் கொன்று விடுவேன் என மர்ம நபர் மிரட்டியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.