அமெரிக்க மூத்த அலுவலர் ஞாயிற்றுக்கிழமையன்று, இந்தியாவில் அமெரிக்க பணியகம் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் முடிந்தவரை அதிகமான மாணவர்களுக்கு விசா விண்ணப்பதாரர்களுக்கு இடமளிக்கத் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது என்றும், அவர்களின் முறையான பயணத்தை எளிதாக்குவது-அதற்கு முன்னுரிமை அளிப்பதாகவும் கூறினார்.
"ஜூன் 14 முதல் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் விசா நியமனங்களைப் பெற்றுள்ளனர். ஆயிரக்கணக்கான விசா நியமனங்கள் இருக்கின்றன; வரும் வாரங்களில் மேலும் ஆயிரக்கணக்கானோருக்கு விசா நியமனங்கள் வழங்கப்படும்" என்று அமெரிக்க தூதரகம் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
"நீங்கள் சந்தித்த தொழில்நுட்ப சிக்கல்களைத் தீர்க்க நாங்கள் விடாமுயற்சியுடன் பணியாற்றுகிறோம், உங்கள் பொறுமையை நாங்கள் பாராட்டுகிறோம்" என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.