அமராவதி(ஆந்திரா): ஆந்திராவின் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினரால் லேபாக்ஷி நாலெட்ஜ் ஹப் (Lepakshi Knowledge Hub) என்ற நிறுவனத்தின் மூலம் பல கோடி மதிப்புள்ள நிலங்கள் கையாடல் செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
‘ இந்து புராஜெக்ட்ஸ்’ என்ற பெயரால் அடமானம் வைக்கப்பட்ட மதிப்புமிக்க நிலங்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் இத்திட்டத்தின் மூலம் ரூ.2,500 கோடி மதிப்புள்ள நிலம் ரூ.500 கோடிக்கு பெயரளவுக்கு வாங்கப்பட்டது. இந்நிலையில் ரூ.4,531 கோடி மதிப்புள்ள நிலத்தை ரூ.2,500 கோடிக்கு கடனாக வழங்க வங்கிகள் ஏன் தயாராக உள்ளன? இந்த செயல்முறையில் மாநில அரசின் பங்கு என்ன? இந்து புராஜெக்ட்ஸ் அனைத்து செயல்முறையையும் தெளிவாக விசாரித்தால், ஒவ்வொரு கட்டத்திலும் எந்த அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளன என்பது அம்பலமாகும்.
ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஒருங்கிணைந்த ஆந்திரப்பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தபோது, அனந்தபூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் லேபாக்ஷி நாலெட்ஜ் ஹப்(Lepakshi Knowledge Hub) என்ற நிறுவனத்தின் பெயரில், அவரது நெருங்கிய நண்பர்களுக்கு ஒதுக்கப்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது. மேலும் இவை அனைத்தும் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டியின் தூண்டுதலின் பேரில் நடந்ததாக மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ தெரிவித்துள்ளது.
’இந்து புராஜெக்ட்ஸ்’ என்பது ஷியாம்பிரசாத் ரெட்டி என்பவரின் நிறுவனமாகும். அவர்தான் 'இந்து புராஜெக்ட்ஸ்' செயல்பாட்டில் முக்கியப்பங்கு வகித்தார். இந்து புராஜெக்ட்ஸானது, அதன் கடனால் சில ஆண்டிற்கு முன்பு திவாலாகிவிட்டது. கடந்த மார்ச் 2019 நிலவரப்படி இந்நிறுவனத்திற்கு, வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய கடன் ரூ. 4,531.44 கோடி நிலுவையில் உள்ளது.
இந்து நிறுவனத்தின் திவால்நிலையைத் தீர்க்கும் பொறுப்பை ஹைதராபாத்தில் உள்ள தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம்- NCLT துறையினை எடுத்துக்கொண்டது. இதன் ஒரு பகுதியாக, கடனாளர்களால் கோரப்பட்ட ரூ.4,531.44 கோடியில், ரூ.4,138.54 கோடி கடன் திவால் பொறிமுறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
எர்தின் புராஜெக்ட் முன்மொழிவு: இந்த தொகையை கடன் பிரச்னையைத்தீர்க்க கே.ராமச்சந்திர ராவின் முதலீடு மற்றும் எர்தின் புராஜெக்ட் வழங்கும் ரூ. 500 கோடியை செலுத்தும் முன்மொழிவுக்கு கடன் வழங்குநர்கள் குழு ஒப்புக்கொண்டது. மேலும் சட்ட தீர்ப்பாயத்தின் ஒப்புதலும் முடிந்துவிட்டது. நிறுவனத்தின் உரிமையை மாற்றிய பிறகு மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு, நிறுவனம் கூடுதலாக ரூ.40 கோடியை செயல்பாட்டு மூலதனமாக வழங்க வேண்டும். இந்த கூடுதல் தொகையை கூட எர்தின் கன்சார்டியம் வங்கிகளுக்கு செலுத்தாமல் உள்ளது.
பலகோடி மதிப்புள்ள நிலங்கள்: பெங்களூருவில் இருந்து ஹைதராபாத் செல்லும் வழியில், ஆந்திர எல்லையில் தொடங்கி, 18 கி.மீ. எல்லைக்குள் சாலையின் இருபுறமும் லேபாக்ஷி நிறுவனத்தின் நிலங்கள் உள்ளன. ஆந்திராவின் எல்லையில் இருந்து கர்நாடகாவை நோக்கி சுமார் 65 கி.மீ., தொலைவில் பெங்களூரு சர்வதேச விமான நிலையம் அதே சாலையில் அமைந்துள்ளது.