லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டார். அங்கு ரூ.500 கோடி மதிப்புள்ள 37 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், "கரோனா வைரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க பாடுபடும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். அவரது வழிகாட்டுதலின் கீழ் நாட்டின் விஞ்ஞானிகள் கரோனா எதிர்ப்பு தடுப்பூசிகளைக் உருவாக்கிவருகின்றனர். ஒரே நேரத்தில் இரண்டு தடுப்பூசிகளை அறிமுகப்படுத்திய முதல் நாடு இந்தியா.
முந்தைய அரசாங்கங்கள் நாட்டில் ஒவ்வொரு சர்ச்சையை தொடங்கிவிட்டன. ராமர் ஒரு கற்பனையான கதாபாத்திரம் என்று கூறியவர்கள், இப்போது அவர் அனைவருக்கும் சொந்தமானவர் என்று கூறுகிறார்கள். இது ஒரு நல்ல மாற்றம்.