தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்கத்தை எதிர்ப்பவர்கள் வரலாறு அறியாதவர்கள் - குலாம் நபி ஆசாத் - வரலாறு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் வகையிலான 370வது சட்டப் பிரிவு நீக்க விவகாரத்தை எதிர்ப்பவர்கள், காஷ்மீர் மாநிலத்தின் வரலாறு தெரியாதவர்கள் என்று அம்மாநில முன்னாள் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்து உள்ளார்.

காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்கத்தை எதிர்ப்பவர்கள் வரலாறு அறியாதவர்கள் - குலாம் நபி ஆசாத்
காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்கத்தை எதிர்ப்பவர்கள் வரலாறு அறியாதவர்கள் - குலாம் நபி ஆசாத்

By

Published : Aug 7, 2023, 10:20 AM IST

தோடா:ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் வகையிலான இந்திய அரசியல் அமைப்பின் 370வது சட்டப் பிரிவை, மத்திய அரசு, கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி நீக்கி இருந்தது. இதனைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. இந்த வழக்குகளின் விசாரணை, பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில், இதன் வழக்கு விசாரணை, ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி முதல் தினந்தோறும் நடைபெறும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள், கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்த வழக்குகள் தொடர்பான பல்வேறு மனுக்கள் விசாரிக்கப்பட உள்ள நிலையில் திங்கள் மற்றும் வெள்ளி தவிர மற்ற நாட்களில் விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய் மற்றும் சூர்யா காந்த் ஆகியோர் அடங்கிய அரசியலமைப்பு அமர்வு விசாரித்து வருகின்றன.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில், ANI செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சரும், ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் தலைவருமான குலாம் நபி ஆசாத் கூறியதாவது, “ ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப் பிரிவு நீக்கத்தை எதிர்ப்பவர்கள், யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் வரலாறு மற்றும் புவியியல் அமைப்பை அறியாதவர்கள்” என குறிப்பிட்டு உள்ளார்.

370வது சட்டப் பிரிவு நீக்கப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ள நிலையில், அம்மாநிலத்தில் அமைதி, வளர்ச்சி ஏற்பட்டு அங்கு புதிய விடியல் தோன்றி உள்ளதாக, பாரதிய ஜனதா கட்சி தெரிவித்து உள்ள நிலையில், குலாம் நபி ஆசாத், பிராந்தியக் கட்சிகளின் பெயரைக் குறிப்பிடாமல், 370வது சட்டப் பிரிவு நீக்கத்தை எதிர்ப்பவர்கள், அம்மாநிலத்தின் வரலாறு, புவியியல் அமைப்பு மட்டுமல்லாது, அதன் தற்போதைய நிலையையும் அறியாதவர்கள் என குறிப்பிட்டு உள்ளார்.

370வது சட்டப் பிரிவு, “எந்த பகுதிக்கும், எந்த மாகாணத்திற்கும் அல்லது எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல என்று குறிப்பிட்டு உள்ள குலாம் நபி ஆசாத், அனைவரும் சம பலன்களை அடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே, இந்த நடவடிக்கையை, மத்திய அரசு மேற்கொண்டு உள்ளதாக”, ஆசாத் தெரிவித்து உள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப் பிரிவு நீக்கப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை ஒட்டி, பாரதிய ஜனதா கட்சி சார்பாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், அம்மாநிலத்தில் அமைதி, வளர்ச்சி ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேநேரம், ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான் மெகபூபா முப்தி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களை, அம்மாநில அரசு, வீட்டுக்காவலில் வைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் வகையிலான, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தற்காலிக விதியாக குறிப்பிடப்பட்டு உள்ள370 வது சட்டப் பிரிவை எப்படி நிரந்தரமாக முடியும் என்று இதுதொடர்பான வழக்கு விசாரணையின் போது, தலைமை நீதிபதி சந்திரசூட் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதையும் படிங்க: உலகத்தரத்திற்கு மாறும் சேலம் ரயில் நிலையம்..! ரூ.45 கோடியில் மேம்பாட்டுப் பணிகள்!

ABOUT THE AUTHOR

...view details