பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இரண்டு கட்ட தேர்தல் நிறைவடைந்து, மூன்றாம் கட்ட தேர்தல் நவம்பர் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பரப்புரைக்கு இன்றே கடைசி நாள் ஆகும். இன்றைய பரப்புரையில் பேசிய பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், இதுவே என் கடைசி தேர்தல். எனவே மக்கள் என்னை அதிகப்படியான வாக்குகளில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கடைசி பரப்புரை, கடைசி தேர்தல் - நிதிஷ் குமார் கொடுத்த ஷாக்! - nitish kumar
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையில் ஈடுபட்டிருந்த முதலமைச்சர் நிதிஷ் குமார், இதுவே என் கடைசி தேர்தல் என கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Last election - nithish kumar
1977ஆம் ஆண்டு தொடங்கியது நிதிஷ் குமாரின் அரசியல் பயணம். இதுவரை 6 முறை முதலமைச்சராக இருந்திருக்கிறார். திடீரென இதுவே கடைசி தேர்தல் என அவர் அறிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.