தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாட்டிலே முதல் முறையாக திருநங்கை - திருநர் தம்பதிக்கு குழந்தை!

நாட்டிலேயே முதல் முறையாக திருநங்கை - திருநர் தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தை நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

திருநங்கை - திருநர் தம்பதிக்கு குழந்தை
திருநங்கை - திருநர் தம்பதிக்கு குழந்தை

By

Published : Feb 9, 2023, 7:58 AM IST

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜியா பவெல், ஷாஹாத். திருநங்கை திருநர் தம்பதியான இவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். அண்மையில் பவெல், தன் இணை 8 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார்.

மேலும் ஒரு குழந்தைக்கு பெற்றோராக வேண்டும் என்ற கனவு விரைவில் நினைவாக உள்ளதாக பதிவிட்டார். இந்த பதிவு சமூக வலைதள பக்கத்தில் அதிக கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், ஜியா பவெல், ஷாஹாத் ஜோடிக்கு அழகிய குழந்தை பிறந்துள்ளது. கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.

இதுகுறித்து ஜியா பவெல் கூறியதாவது, "ஷாஹாத்துக்கு அரசு மருத்துவமனையில் காலை 9.30 மணிக்கு அறுவை சிகிச்சை முறையில் குழந்தை பிறந்தது. குழந்தையும், ஷாஹாத்தும் நலமாக உள்ளனர். என்ன குழந்தை என்பதை இப்போதைக்கு தெரிவிக்க விரும்பவில்லை” என்றார்.

மார்ச் 4 ஆம் தேதி குழந்தை பிறப்பதாக முன்னர் தேதி குறிக்கப்பட்டு இருந்த நிலையில், மருத்துவர்களின் அறிவுரையின் படி முன்கூட்டியே அறுவை சிகிச்சை மூலம் குழந்தை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டிலேயே முதல் முறையாக மூன்றாம் பாலினத்தை சேர்ந்த தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளது.

திருநங்கை திருநர் தம்பதிகளான ஜியா பவெல் மற்றும் ஷாஹாத், கடந்த 3 ஆண்டுகளாக லிவ்விங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்ததாக கூறப்பட்டுள்ளது. வாழ்க்கையில் தங்களுக்குள் ஒரு பிடிப்பு வேண்டும் என்ற காரணத்திற்காகவும், சமுதாயத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும் என்ற காரணத்திற்காகவும் குழந்தையை பெற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:தயாரிப்பாளராகும் திட்டம் இல்லை: ஆர்.ஜே.பாலாஜி பளீச்

ABOUT THE AUTHOR

...view details