திருவனந்தபுரம்: ஒன்றிய அரசு குத்தகைக்குவிட முடிவுசெய்த ஆறு விமான நிலையங்களில் திருவனந்தபுரம் விமான நிலையமும் ஒன்றாகும். திருவனந்தபுரம் பன்னாட்டு விமான நிலையத்தை குத்தகைக்குவிட எதிர்ப்புத் தெரிவித்து கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கும் நிலையில், நேற்று (அக். 13) அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்திய விமானத் துறை அலுவலர்கள் ஆவணங்களை ஒப்படைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.
அதானி குழுமம் அடுத்த 50 ஆண்டுகளுக்கு விமான நிலையத்தின் செயல்பாடுகள், பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும். விமான நிலையத்தை ஒன்றிய அரசு, தனியார் வசம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கேரள அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது.