தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தெலங்கானா முதலமைச்சர் கேசிஆர் உடன் திருமாவளவன்! - தெலங்கானாவில் திருமாவளவன்

தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் புதிய தேசியக் கட்சி ஒன்றை நாளை(அக்.6) தொடங்கவுள்ளார். இந்நிலையில், அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க விசிக தலைவர் திருமாவளவன் ஹைதராபாத் சென்றுள்ளார்.

தெலங்கான முதலமைச்சர் கேசிஆர் உடன் திருமாவளவன்...!
தெலங்கான முதலமைச்சர் கேசிஆர் உடன் திருமாவளவன்...!

By

Published : Oct 5, 2022, 12:53 PM IST

ஹைதராபாத்: தேசிய அளவில் புதிய கட்சியாக பாரத் ராஷ்ட்ரிய சமிதி எனும் கட்சியை நாளை (அக்.6) தொடங்கவிருக்கும் தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ்-ஐ வாழ்த்துவதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஹைதராபாத் சென்றுள்ளார்.

அங்குள்ள முதலமைச்சர் மாளிகையில் திருமாவளவனுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. பின்பு அதே நிகழ்வுக்கு வருகை தந்துள்ள பிற மாநிலத்தலைவர்களையும் தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ், திருமாவளவனுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

மேலும், நேற்றே(அக்.4) ஹைதரபாத் சென்ற திருமாவளவன் அங்குள்ள ஹூசைன் சாகர் ஏரியில் பெரிய புத்தர் சிலைக்குக்கீழே நின்று ஓர் புகைப்படம் எடுத்து, அதில் “ஹைதராபாத்தில் ஹூசைன் சாகர் எனும் நதியிலமைந்துள்ள பிரமாண்டமான புத்தர் சிலையைப் பார்க்கச்சென்றோம்.

என்.டி.ஆர் ஆட்சிக்காலத்தில் இது நிறுவப்பட்டதாகும். மகாவிஷ்ணுவின் அவதாரமே புத்தரென நம்பித்தான் என்.டி.ஆர் இச்சாதனையைப் படைத்துள்ளார். புத்தர் ஒருநாளும் கடவுளை போதிக்கவில்லை” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: Video: குவார்ட்டரும் கோழியையும் பரிசளித்த டிஆர்எஸ் நிர்வாகி

ABOUT THE AUTHOR

...view details