தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆர்டிகல் 370 நீக்கப்பட்டு மூன்றாமாண்டு நிறைவு - என்ன சொல்கிறது ஆர்டிகல் 370

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவான 370ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்டு இன்றுடன் (ஆகஸ்ட் 5) மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

Etv Bharatஜம்மு-காஷ்மீர் வரலாற்றில் கருப்பு தினம் - ஆர்டிகல் 370 சட்டத்தை நீக்கிய மூன்றாமாண்டு நினைவு தினம்
Etv Bharatஜம்மு-காஷ்மீர் வரலாற்றில் கருப்பு தினம் - ஆர்டிகல் 370 சட்டத்தை நீக்கிய மூன்றாமாண்டு நினைவு தினம்

By

Published : Aug 5, 2022, 9:25 AM IST

ஜம்மு-காஷ்மீர்:இந்தியாவின் வடகோடி எல்லை மாநிலமான ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பல்வேறு சிக்கல்களுக்கும் மத்தியில், 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தும், சட்ட சுதந்திரமும் வழங்ககூடிய இந்திய சட்டப்பிரிவு ஆர்டிகல் 370 பிரிவை ரத்து செய்து உத்தரவிட்டார். இது ஜம்மு-காஷ்மீர் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவான 370ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்டு இன்றுடன் (ஆகஸ்ட் 5) மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

2019 ஆம் ஆண்டு இதே நாளில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்டப்பிரிவு 370 மற்றும் 35A ஐ நீக்குவதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இந்த மசோதவானது நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்டது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் மூலம், ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

காஷ்மீரில் அதிக எண்ணிக்கையில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர்

என்ன சொல்கிறது ஆர்டிகல் 370?ஆங்கிலேய அரசு இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்த 1947 ஆம் ஆண்டிற்கு பின் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டது. இந்த பிரிவினையின் ஜம்மு-காஷ்மீர் பகுதி ராஜா ஹரி சிங் மகாராஜாவின் கட்டுபாட்டின் கீழ் இருந்தது. கடைசி மகாராஜாவான் இவர் ஜம்மு-காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க ஒப்புக்கொண்டார்.

ராஜா ஹரி சிங் மகாராஜா

இருப்பினும் ஹரி சிங் மகாராஜா இதற்கு சில நிபந்தனைகளை விதித்து இருந்தார். அந்த நிபந்தனைகளை ஏற்ற இந்திய அரசு இம்மாநிலத்திற்கென தனியாக சில சிறப்பு சலுகைகளை பிறப்பித்து சட்டப்பிரிவு 370ஐ அமல்படுத்தியது. இந்த சட்டப்பிரிவின் படி, ராணுவம், வெளியுறவு, தகவல் தொடர்பு ஆகிய துறைகள் தவிர பிற துறைகளில் ஒன்றிய அரசு இயற்றும் சட்டங்கள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஒப்புதல் இல்லாமல் இயற்றினால் அவை இம்மாநிலத்திற்கு பொருந்ததாது. மேலும் வேற்று மாநிலத்தவர்கள் இம்மாநிலத்தில் சொத்துகள் வாங்க முடியாது.

இந்திய அரசியல் சாசனத்தின் 238 ஆவது பிரிவு இம்மாநிலத்திற்கு பொருந்தாது. மேலும் ஜம்மு-காஷ்மிரின் எல்லைகளை குறைக்கவோ அல்லது கூட்டவோ முடியாது.

ம்மு-காஷ்மிரின் எல்லைகளை குறைக்கவோ அல்லது கூட்டவோ முடியாது.

சட்டப்பிரிவு 370ஐ நீக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: இந்திய பாராளுமன்றத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கும் சட்டமசோதா 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஒரு நாள் முன்பு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து முன்னணி அரசியல் கட்சிகளின் தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் சிலர் தடுத்து வைக்கப்பட்டனர். அதே நேரத்தில் காஷ்மீரில் பல மாதங்களுக்கு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது.

காஷ்மீரில் அதிக எண்ணிக்கையில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர் மற்றும் இணையம் உள்ளிட்ட தொலைபேசி சேவைகள் பல மாதங்களாக நிறுத்தப்பட்டன. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதோடு ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்புச் சட்டமும் ரத்து செய்யப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன் கீழ் உள்துறை அமைச்சகம் ஜம்மு-காஷ்மீரை ஆளுகிறது.

இருண்ட நாள்:சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட நாள் இம்மாநில வரலாற்றில் இது எப்போதும் இருண்ட நாளாகக் கருதப்படும் எனவும், இந்த நாள் காஷ்மீர் மக்களின் அதிகாரம் நீக்கப்பட்ட நாளாக பார்க்கப்படும் எனவும் மக்கள் மாநாடு அமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும் தேசிய மாநாடு, பிடிபி, காங்கிரஸ் மற்றும் அப்னி கட்சி உள்ளிட்ட பிற முக்கிய அரசியல் கட்சிகள் இது குறித்து இன்னும் பதிலளிக்கவில்லை.

ஆகஸ்ட் 5, 2019 க்குப் பிறகு, மத்திய அரசு பிரிவினைவாத அமைப்புகளைத் தடை செய்தது. மேலும் சில அமைப்பின் தலைவர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களை சிறையில் அடைத்தது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை மேம்பட்டுள்ளதாகவும், கல் வீச்சு சம்பவங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் சம்பவங்கள் குறைந்துள்ளதாகவும், பிரிவினைவாதத்தை ஒடுக்குவதன் மூலம் தீவிரவாதமும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசும் உள்ளூர் நிர்வாகமும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:'பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எப்போதும் நம்முடையதுதான்' - ராஜ்நாத் சிங்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details