தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திருடச் சென்ற வீட்டில் 500 ரூபாயை வைத்துவிட்டு வந்த கொள்ளையர்கள்! - 500 ரூபாய்

டெல்லியில் திருடச் சென்ற வீட்டில் திருடுவதற்கு எதுவும் இல்லாததால், 500 ரூபாய் நோட்டை திருடர்கள் வைத்து விட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

500 ரூபாயை திருடச் சென்ற வீட்டில் வைத்துவிட்டு வந்த கொள்ளையர்கள்!
500 ரூபாயை திருடச் சென்ற வீட்டில் வைத்துவிட்டு வந்த கொள்ளையர்கள்!

By

Published : Jul 25, 2023, 12:10 PM IST

டெல்லி: டெல்லியின் செக்டார் 8-இல் உள்ள ஒரு வீட்டில் ராமகிருஷ்ணா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற பொறியாளர் ஆவார். இவரது மகன் குருகிராமில் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த ஜூலை 19 அன்று தனது மனைவி உடன் குருகிராமில் வசித்து வரும் தனது மகனைப் பார்ப்பதற்காக சென்று உள்ளார். இதனிடையே அதற்கு மறுநாள் (ஜூலை 20) அன்று நள்ளிரவு ராமகிருஷ்ணாவின் வீட்டில் திருடர்கள் புகுந்ததாக அருகில் வசிப்பவர்கள் தகவல் அளித்து உள்ளனர்.

இந்த தகவலின் பேரில், ராமகிருஷ்ணா தனது வீட்டிற்கு விரைந்து வந்து உள்ளார். அப்போது, அவரது வீட்டின் மெயின் கதவு உடைக்கப்பட்டு இருந்து உள்ளது. இதன் பிறகு உள்ளே சென்று பார்த்து உள்ளார். ஆனால், வீட்டில் எந்தவொரு பொருளோ அல்லது பணமோ திருடு போகவில்லை. அதேநேரம், கதவின் அருகில் 500 ரூபாய் நோட்டு கிடந்து உள்ளது. பின்னர், இது தொடர்பாக பிஜாரி காவல் நிலையத்தில் ராமகிருஷ்ணா புகார் அளித்து உள்ளார்.

இதையும் படிங்க:இது என்னய்யா புது புரளியா இருக்கு... கிஃப்ட் பார்சல் மூலம் மோசடி: சைபர் கிரைம் எச்சரிக்கை!

இது தொடர்பாக காவல் துறையினர் தரப்பில் கூறுகையில், “கடந்த ஜூலை 21 அன்று, புகார் அளித்த ராமகிருஷ்ணா என்பவருக்கு அவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர்கள், தங்களது வீட்டில் திருட்டு நடந்து உள்ளதாக தகவல் கொடுத்து உள்ளனர். இதன் அடிப்படையில், அவர் உடனடியாக புறப்பட்டு வீட்டிற்கு வந்து உள்ளார். அப்போது, அவரது வீட்டின் மெயின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்து உள்ளது.

எனவே, வீட்டினுள் சென்று பார்த்து உள்ளார். அப்போது, அவர் தனது வீட்டில் எதுவும் திருடப்படவில்லை என்பதை அறிந்து உள்ளார். தன்னுடைய வீட்டில் இருந்து எதுவும் திருடு போகவில்லை என தெரிவித்த அவர், மெயின் கேட்டின் அருகில் 500 ரூபாய் நோட்டு இருந்ததாகவும் எங்களிடம் தெரிவித்து உள்ளார். வீட்டு அலமாரி திறக்கப்படவில்லை. விலை மதிப்புமிக்க அல்லது திருடும் வகையிலான எந்த ஒரு பொருளும் அவரது வீட்டில் இல்லை. மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து ராமகிருஷ்ணா அளித்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட இந்திய தண்டனைச் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:வாயில் பல்லி நுழைந்ததால் சிறுவன் உயிரிழப்பா? சத்தீஸ்கரில் மர்மம்!

ABOUT THE AUTHOR

...view details