பெங்களூரு:கர்நாடக மாநிலம் துமகூருவில் உள்ள குப்பி பேருந்து நிலையத்தில் நேற்று, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்து கடத்தப்பட்டது. தகவலறிந்த, ஓட்டுநர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.
அத்துடன், பேருந்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருப்பதையும் தெரிவித்தார். அதனடிப்படையில், குப்பி பேருந்து நிலையத்திலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள ஜன்னேனஹள்ளியில் பேருந்து நின்றுகொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.