தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

போலீஸ் வண்டியையே ஸ்கெட்ச் போட்டு அபேஸ் செய்த 'பலே' திருடர்கள் - சூர்யா பேட்டை

தெலங்கானா மாநிலம், சூர்யபேட்டை மாவட்டத்தில் போலீஸ் வாகனத்தை திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

போலீசாரிடம் கைவசம் காட்டிய திருடர்கள்
போலீசாரிடம் கைவசம் காட்டிய திருடர்கள்

By

Published : Dec 15, 2022, 7:58 PM IST

தெலங்கானா:பொதுவாக, யாரேனும் வாகனம் தொலைந்தால், காவல் துறையை அணுகுவார்கள். அதே போலீஸ் வாகனம் திருடப்பட்டால்..? அப்படி ஒரு நிகழ்வு, தெலங்கானா மாநிலம், சூர்யபேட்டையில் நடந்துள்ளது. போலீசாருக்கே டிமிக்கி கொடுத்துவிட்டு, அவரது வாகனத்தை இரண்டு திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

தெலங்கானா மாநிலம், சூர்யபேட்டையில் உள்ள புதிய பேருந்து நிலைத்தில், நேற்று (டிச. 14) இரவு, அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் போலீஸ் வாகனத்தை (TS 09 PA 0658) திருடிச் சென்றுள்ளனர். இதனை அறிந்த காவல் துறையினர், வாகனத் திருட்டில் ஈடுபட்டவர்களைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், இன்று (டிச. 15) கோதாடா மாவட்டத்தில் வாகனத்தை கண்டறிந்தனர். ஆனால், கொள்ளையர்கள் சிக்க வில்லை. சூர்யபேட்டையில் போலீஸ் வாகனம் திருட முயன்றது, இது இரண்டாவது முறை ஆகும். வாகனத்தை மீட்ட காவல் துறையினர் தற்போது கொள்ளையர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 100-வது முறையாக சிறைக்கு சென்ற பலே திருடன்

ABOUT THE AUTHOR

...view details