சண்டிகர்:ஹரியானாவில் ஜிந்த் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் 1,710 கரோனா தடுப்பூசிகள் அண்மையில் காணாமல்போனது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம், காவல் துறையில் புகார் அளித்திருந்தது.
இந்நிலையில், ஜிந்த் காவல் நிலையம் வெளியே உள்ள தேநீர்க் கடையில் திருடப்பட்ட அனைத்து கரோனா தடுப்பூசிகளும், கடிதம் ஒன்றும் இருந்துள்ளது. அதில், கரோனா தடுப்பூசியென்று தெரியாமல் திருடிவிட்டேன் என்றும் மன்னித்து விடுங்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு திருடிய நபரைத் தேடி வருகின்றனர். கள்ளச்சந்தையில் ரெம்டிசிவர் மருந்து அதிக விலைக்கு விற்பனை ஆகுவதால், அந்த மருந்து என்று நினைத்து கரோனா தடுப்பூசியைத் திருடியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
ஹரியானாவில் இதுவரை 3 லட்சத்து 81 ஆயிரம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க:'ஆறு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு' டெல்லி துணை முதலமைச்சர் கவலை!