நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலையால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. புதுச்சேரியில் இதுவரை 78 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந்து தேவையான அளவு புதுச்சேரி அரசிடம் உள்ளது என அம்மாநில சுகாதாரத் துறை செயலர் அருண் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் ரெம்டெசிவிர் மருந்துக்குத் தட்டுப்பாடு இல்லை - சுகாதாரத் துறை செயலர் - corona news
புதுச்சேரி: கரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந்து தேவையான அளவு அரசிடம் இருப்பு உள்ளது என புதுச்சேரி சுகாதாரத் துறை செயலர் அருண் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு இல்லை - சுகாதாரத்துறை செயலர்
இதுகுறித்து அவர் பேசுகையில் ”புதுச்சேரி அரசு, தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகளுக்கு தேவையான ரெம்டெசிவிர் மருந்து மத்திய அரசால் 1400 vials (குப்பிகள்) வழங்கப்பட்டுள்ளன. இங்கு சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளிகளுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லாமல், தேவைக்கேற்ப வழங்கப்படுகிறது. மேலும் 1,000 ரெம்டெசிவிர் மருந்துகள் நாளை புதுச்சேரி வர உள்ளது” என்றார்.
இதையும் படிங்க: அதிமுக எம்பிக்கள் ராஜினாமா ஏற்பு!