தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"இந்திய ரூபாய் மதிப்பு உயர்வது பொருளாதார வளர்ச்சியை காட்டுகிறது" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்! - அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பின் ஏற்ற இறக்கத்தை ரிசர்வ் வங்கி நிர்ணயிப்பதில்லை

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வது, பொருளாதார வளர்ச்சியை காட்டுகிறது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Indian
Indian

By

Published : Aug 2, 2022, 9:39 PM IST

டெல்லி:கடந்த 29ஆம் தேதி இந்திய பங்குச்சந்தைகள் உச்சம் அடைந்தன. கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு அன்று பங்குச்சந்தை சென்செக்ஸ் 712 புள்ளிகளும், நிப்டி 228 புள்ளிகளும் அதிகரித்தன. ஓராண்டில் இல்லாத அளவுக்கு அன்றைக்கு அன்னிய முதலீட்டாளர்கள் 6 ஆயிரத்து 300 கோடி ரூபாய் பங்குகளை வாங்கினர்.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் 50 பைசா அதிகரித்து, 79 ரூபாய் 25 காசுகளாக இருந்தது. இது இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியை குறிப்பதாக நிபுணர்கள் கூறியிருந்தனர்.

இந்த நிலையில், இந்திய ரூபாய் மதிப்பு அதிகரித்தது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசினார். அப்போது, "அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பின் ஏற்ற இறக்கத்தை ரிசர்வ் வங்கி நிர்ணயிப்பதில்லை, அதில் ரிசர்வ் வங்கியின் தலையீடு இல்லை. இந்திய ரூபாய் மதிப்பை ரிசர்வ் வங்கி கண்காணித்து வருகிறது.

இந்திய ரூபாய் மதிப்பில் எந்த வீழ்ச்சியும் இல்லை. உண்மையில் ரூபாய் மதிப்பு இயல்பாக உயர்ந்து வருகிறது. மற்ற நாடுகளைப் போல ரூபாய் மதிப்பை இந்தியா வெளியிலிருந்து கட்டுப்படுத்துவது இல்லை. இப்போது இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது, பொருளாதார வளர்ச்சியையே குறிக்கிறது. ஜூலை 22 நிலவரப்படி, 571 பில்லியன் டாலர் கையிருப்பில் உள்ளது. இது சிறிய தொகை அல்ல. இந்தியா போதுமான வளர்ச்சி நிலையில் இருக்கிறது" என்று கூறினார்.

இதையும் படிங்க:சந்தேகத்திற்குரிய ஆன்லைன் கடன் செயலிகளுக்கு எதிராக நடவடிக்கை - நிர்மலா சீதாராமன்

ABOUT THE AUTHOR

...view details